குன்னூரில் நியாயவிலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

குன்னூரில்  நியாயவிலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
X
குன்னூர் பாரத்நகர் பகுதியில் ரூ. 16 லட்சம் மதிப்பில் நியாயவிலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரத்நகர் பகுதியில், அண்மையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் செயல்பட்டு வந்த நியாயவிலை கடை, சில நாட்களுக்கு முன்பு மழையால் சேதமடைந்தது. இதையடுத்து, 16 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடையை சீரமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் பேரில், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து நியாயவிலை கடையை முழுவதுமாக இடித்து, புதிதாக கட்டுவதற்காக பணிகள் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய ஊராட்சி பெருந்தலைவர் சுனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமன், ஒன்றியக்குழு உறுப்பினர் கருணாநிதி, பொறியாளர் மணிகண்டன், பேரட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஷ், மற்றும் துணைத்தலைவர் சுகுணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers