டூ வீலரில் பயணிக்கும் 2 பேருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: ஆக. 1 முதல் அமல்

நீலகிரி மாவட்டத்தில், டூ வீலரில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிவது, வரும் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டம் என்பதால், நீலகிரியில் சாலைகள் குறுகியதாகவும், ஏராளமான வளைவுகள் கொண்டதாகவும் உள்ளன. சுற்றுலா மாவட்டமாக திகழ்வதால், அதிகளவிலான வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள், இருசக்கர வாகனங்கள் வருவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக, பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு இருச்சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள், முறையாக ஹெல்மெட் அணியாமல் இருப்பதால், விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன,

இதை தவிர்க்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் என, இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை, நீலகிரி மாவட்ட காவல்துறை கட்டாயமாக்கி உள்ளது.

அத்துடன், ஹெல்மெட் சரியான முறையில் லாக் செய்து இருக்க வேண்டும் என்றும், ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் இருக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகளுக்கு, குன்னூர் போக்குவரத்து காவல்துறை சிறப்பு ஆய்வாளர் சுந்தரவள்ளி தலைமையில் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பிற மாவட்டங்களில் இருந்து வரும் இருச்சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு, இதன் அவசியம் குறித்து போலீசார் விளக்கி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!