நீலகிரி: வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்- மக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலை, அடர்ந்த வனப்பகுதியாக உள்லது. இதனால், இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி உலா வருகின்றன.

இந்நிலையில், இன்று இந்த மலைப்பாதையில் நான்கு யானைகள் குட்டியுடன் சாலையை வழிமறித்தது இதனால் சாலை வழியே சென்ற 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் காத்திருந்தன.

சில வாகனங்கள் திரும்பிச் சென்றன. மேலும் கெத்தை சோதனைச்சாவடிக்கு, அரசு அதிகாரிகள் பணிக்கு செல்ல முடியாமல் ஒரு ணி நேரத்திற்கு மேல் காத்திருந்து, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றவுடன் அச்சத்துடன் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!