மத்திய அரசை கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்: 50 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து குன்னூரில் ஆர்ப்பாட்டம்: 50 பேர் கைது
X

குன்னூரில்,  மத்திய அரசை கண்டித்து  மறியலில் ஈடுபட்ட முயன்ற கம்யூனிஸ்ட்டு , காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து, குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில், மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட்டு , காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பி்ல், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதி்ல், நீலகிரி தோட்டத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள தினக்கூலி ௹பாய்.425.40 /-ஐ உடனடியாக அனைத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்; வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்; கலால் வரியை நீக்கி பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும்; விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும், யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற நீலகிரி மலைரயிலை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில், கம்யூனிஸ்ட் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!