குன்னூரில் சந்தன மரம் வெட்டி கடத்தல்: வனத்துறை விசாரணை
குன்னூர் அருகே நான்சச் செட்டியார் தோட்டத்தில் வெட்டப்பட்டுள்ள சந்தன மரங்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நான்சச் செட்டியார் தோட்டத்தில், 50 க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளன. இவை அனைத்தும் இயற்fகையாகவே வளர்ந்தவை. இந்த நிலையில், இரவில் கொட்டும் மழையை பயன்படுத்தி 5 சந்தன மரங்களை, மர்ம நபர்கள் அறுத்து சென்றுள்ளனர்.
இப்பகுதியில், வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும் பட்டா நிலத்திலும் அதிக சந்தன மரங்கள் உள்ளதால், இப்பகுதி பாதுக்காக்கப்பட்ட. பகுதியாக வனத்துறை அறிவித்தது. ஆனாலும் சந்தன மரக்கடத்தல் சம்பவங்கல் மட்டும் குறையவில்லை.
சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட பகுதியை குன்னூர் வனத்துறை கொலக்கொம்பை காவல் துறை வருவாய் துறை அதிகாரிகள் ஆயவு செய்தனர் பின்னர் குற்றவாளிகளை விரைவில் வனத்துறையினர் பிடித்துவிடுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu