கோத்தகிரி: சில்மிஷம் செய்த ஆசாமி போக்சோவில் கைது

கோத்தகிரி:  சில்மிஷம் செய்த ஆசாமி போக்சோவில் கைது
X
கோத்தகிரியில், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், சிவலிங்கன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அருகேயுள்ள கிராமத்தில் இருக்கும் 9 சிறுமி ஒருவரின் பெற்றோர், தோட்ட வேலைக்காக பணிக்கு சென்ற நிலையில், வீஅவரது வீட்டிற்கு சென்று சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து, பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.பின்னர், வழக்கு குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

போலீசாரின் விசாரணை முடிவில், சிவலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்