தேயிலை பறிக்கும் உடையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
தேயிலை பறிக்கும் உடையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்.
கோத்தகிரி பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு உறுப்பினர் தேர்தல் வரும் 19 ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 21 ஆம் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக வளர்மதி என்பவர் தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், 21 ஆம் வார்டில் பெரும்பாலனவர்கள் தேயிலைப் பறிக்கும் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இந்த வார்டில் சாலை வசதி, சுடுகாடு வசதி, குடிநீர் வசதி, தடுப்புச் சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே தொழிலாளர்களின் நிலையை உணர்த்துவதற்காக தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu