குன்னூரில் பட்டபகலில் வீட்டுக்குள் நுழைந்த கரடி: பொதுமக்கள் அச்சம்!

குன்னூரில் பட்டபகலில் வீட்டுக்குள் நுழைந்த கரடி: பொதுமக்கள் அச்சம்!
X

பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த கரடி

குன்னூர் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதியிலும் கரடி சர்வசாதாரணமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பகல் நேரத்திலேயே தேயிலை தோட்டங்களிலும்இ, குடியிருப்பு பகுதியிலும் சர்வசாதாரணமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள மூன்று ரோடு பணகுடி எனும் பகுதியல் ராமன் என்பவரது வீட்டிற்கு கரடி ஒன்று நுழைந்து உள்ளே சுற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை அந்த வீட்டில் இருந்தவர்கள் அச்சத்துடன் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர். மேலும் வீட்டிற்குள் கரடி புகுந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!