ரூ. 2.50 லட்சம் செல்போன்கள் கொள்ளை-இருவர் கைது

ரூ. 2.50 லட்சம் செல்போன்கள் கொள்ளை-இருவர் கைது
X

குன்னூர் நகரில் நள்ளிரவில் செல்போன் கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக வடமாநில திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் கடைகள் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கடை ஊழியர்கள் வழக்கம் போல கடையை அடைத்து விட்டு சென்றுள்ளனர். மறுநாள் கடையை திறந்து பார்த்த போது கடையில் செல்போன்கள் திருடு போயிருந்தது. கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்தது.இது குறித்து குன்னூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்ததில் ஒரு திருடன் செல்போன்களை திருடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. குன்னூர் டிஎஸ்பி குமார் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டும், மொபைல் ஐஎம்இ எண்களை கொண்டும் விசாரணை நடத்தினர் . இதில், குன்னூரில் ஒரு ரயில்வே ஒப்பந்ததாரரிடம் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளர்கள் இருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த குளிகுமார், முகம்மது இஸ்ரேல் ஆலம் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!