குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள குறிஞ்சி மலர்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள குறிஞ்சி மலர்
X
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலரை காண உள்ளூர் மக்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகளும் ஆர்வம்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ளதை சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் பல இயற்கை அழகை கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இந்த கால நிலைக்கேற்ப தயார் படுத்தப் பட்டுள்ளது.


இதில் பூங்காக்களில் உள்ள மரங்கள் தாவரங்கள் என அனைத்தும் சிறப்பு மிக்கவையாக திகழ்கிறது. இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர் பூத்துள்ளது. ஏற்கனவே இந்த பூங்காவில் நூற்றாண்டை கடந்த பழமையான மரங்கள் தாவரங்கள் உள்ள நிலையில் குறிஞ்சிப்பூ பூத்திருப்பது உள்ளூர் மக்கள் மக்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது மேலும் குறிஞ்சிப் பூக்கள் இடையே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!