நீலகிரியில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு
பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டை துவக்கி வைத்த ஆளுநர் ரவி
‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை, தமிழக ஆளுநர்.ரவி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் தலைவர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ் மற்றும் அனுவாதினி மொழிபெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் மாநாடு தொடங்கியது. ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல் துணை வேந்தர்களை வரவேற்றுப் பேசினார்.
மாநாட்டில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதேஷ் குமார் ஆன்லைன் மூலம் துணை வேந்தர்களிடம் உரையாற்றினார்
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், தமிழ் மொழியில் கிடைக்காத பாடப் புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்கள், ஆய்வுப் பொருட்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல் – கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu