உதகையில் தேவாலயங்களில் குருத்தோலை பவனி

உதகையில் நடைப்பெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் கிறிஸ்தவர்கள்; கைகளில் குருத்தோலைகள கைகளில் ஏந்தி ஊர்வலமாக பங்கேற்றனர். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை வருகிற 4-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடபடுகிறது.
இதற்கு முந்தய வாரம் குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் குருத்தோலை பவனி உதகையில் இன்று நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு இறப்பதற்கு சில நாள்களுக்கு முன் ஜெர்சலம் நகரின் வீதிகள் வழியாக அவரை கழுதை மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழி நெடுகிலும் நின்ற மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஓசனா பாடல்கள் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் இன்று உதகையில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை பவனியில் பங்கேற்றனர்.
உதகை துய இருதய ஆண்டவர் பேராலயம் பங்கு தந்தை தனிஸ் குருத்தோலைகளை மந்திரித்து மக்களுக்கு வழங்கினார். பின்னர் மக்கள் பவணியாக ஆலயத்திற்ககு சென்று திருப்பலி மற்றும் ஆராதணையில் கலந்துக்கொண்டனர். இதே போல் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் கைகளில் தென்னை குருத்தோலைகள் ஏந்தியபடி ஓசனா பாடல்கள் பாடி பவனியாக வந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu