கூடலூரில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

கூடலூரில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
X

வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை.

கூடலூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்ட பொதுமக்கள் தொடரந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர் அருகே பல கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. வீடுகளையும் விளைநிலங்களையும் யானைகள் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை பீடிக்கரை பகுதியில் அர்ஜுனன் என்பவரது வீட்டின் சுவற்றை இடித்து சேதப்படுத்தி உணவுப்பொருட்களை நாசம் செய்தது. ஏற்கனவே விநாயகன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வரும் நிலையில், வேறு காட்டு யானைகளும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!