கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்; உயிருக்கு பயந்து பொதுமக்கள் அச்சம்

கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்; உயிருக்கு பயந்து பொதுமக்கள் அச்சம்
X

கூடலூர் அருகே காட்டு யானையால் சேதமடைந்த வீடு.

கூடலூர் அருகே மண்வயல் ஓடக் கொல்லி பகுதியில் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீட்டை சேதப்படுத்தியது.

கூடலூர் அருகே கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் யானை உலா வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் மண் வயல் ஓடக் கொல்லி குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள ஷாஜன் ஆண்டனி என்பரது வீட்டை யானை சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினர்.

குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தி சென்றது. இங்கு நாள்தோறும் யானை உலா வருவதால் பெரும் பீதியிலும் அச்சத்திலும் இருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future