அம்மன் கோவிலை சேதப்படுத்திய காட்டு யானை

அம்மன் கோவிலை சேதப்படுத்திய காட்டு யானை
X

சேதமடைந்த கோவில்.

தேயிலை தொழிலாளர்களால் கட்டப்பட்ட அம்மன் கோவிலை மாலை நேரம் உலா வந்த 9 யானைகள் கொண்ட கூட்டம் உடைத்து சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவாலா அட்டி பகுதியில் பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் உள்ளது. இங்குள்ள தேயிலை தொழிலாளர்களால் கட்டப்பட்ட அம்மன் கோவிலை மாலை நேரம் உலா வந்த 9 யானைகள் கொண்ட கூட்டம் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

கோவிலின் முன்புற கதவு மற்றும் சட்டர்களை உடைத்தும், உள்ளே இருந்த பொருட்களை இழுத்து சேதப்படுத்தியும் சென்றுள்ளன. இதேபோல் அருகே உள்ள பொன்னூர் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த காட்டு யானை கூட்டம் தேயிலை தோட்டத்தில் நடமாடியதோடு கோவிலையும் உடைத்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று உள்ளன.

அடிக்கடி இந்த கோவிலை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட முறை இந்த கோவிலை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளதாகவும் கோவிலை பாதுகாக்க கோவிலை சுற்றி தோட்ட நிர்வாகம் சார்பில் மின் வேலி அமைத்து தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்தில் நாடுகாணி வனச்சரகர் பிரசாத் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil