கூடலூர் அருகே வீட்டின் மேல் விழ இருந்த டேங்கர் லாரியால் பரபரப்பு

கூடலூர் அருகே வீட்டின் மேல் விழ இருந்த டேங்கர் லாரியால் பரபரப்பு
X

சாலையில் தொங்கிக்கொண்டிருக்கும் லாரி.

பந்தலூர் செல்லும் சாலையில் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பந்தலூரில் இருந்து தேவாலா செல்லும் சாலையில் உள்ள நீர்மட்டம் பகுதியில் டேங்கர் லாரி ஒன்று சாலையோரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் மீது விழும் நிலையில் இருந்தது. இதனைக்கண்ட குடியிருப்புவாசிகள் உடனே வீட்டில் இருந்து வெளியேறினர். பிறகு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிரேன் மூலம் லாரியை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!