2மயக்க ஊசி செலுத்தியும் தப்பித்தது: 21நாட்களாக போக்கு காட்டும் புலி

T23 புலி மயக்க ஊசி செலுத்தியும் தப்பியது, முதுமலை போஸ்பரா பகுதியிலிருந்து மீண்டும் மசினகுடி பகுதிக்குஇடம் பெயர்ந்தது.

நீலகிரியில் கடந்த 21 நாட்களாக ஒட்டுமொத்த வனத்துறையினருக்கும் சிக்காமல் போக்கு காட்டி வந்த T 23 புலி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை தகவல் தெரிவித்தது.

இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டும் T 23 புலி வனத்துறையிடம் இருந்து தப்பியது இதையடுத்து இரவு முழுவதும் புலியைத் தேடி வனத்துறையினர் ஈடுபட்டனர். இதுவரை புலி சிக்காததால் வனத்துறை குழு மீண்டும் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் மசினகுடி சுற்றி உள்ள கிராமப்பகுதியில் அதிகாலை முதலே வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 21 நாட்களாக வனத்துறைக்கு சிக்காமல் நேற்றிரவு மயக்க ஊசி செலுத்தியும் தப்பித்த டி23 புலியை தேடும் பணி மீண்டும் துவங்கியுள்ளது, இது கூடலூர் மற்றும் மசனகுடி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story