வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
X
தீ வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி வனக்கோட்டத்தில் வனப்பகுதியில் தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை உறைபனி தாக்கம் காணப்பட்டது. நடப்பு மாதம் உறைபனி தாக்கம் இல்லாமல் நீர் பணி தாக்கம் இருந்து வருகிறது.

மழை பெய்யவில்லை தற்போது கோடைகாலம் என்பதால் பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. வறட்சியான நிலை காணப்படுவதால் வனப்பகுதிகளில் உள்ள புற்கள் செடி கொடிகள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே வனப்பகுதியில் தீப்பிடிப்பது தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலை ஓரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சமையல் செய்யக்கூடாது எனவும் அத்துடன் காட்டை ஒட்டிய பகுதியில் இருப்பவர்கள் குப்பைகளை வைக்கக் கூடாது. இதுதொடர்பாக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது ஆகவும் கண்காணிப்பில் யாராவது வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியிலோ அல்லது வனப்பகுதியில் தீ வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!