மதுவை ருசித்து எலிகள் சேட்டை - டாஸ்மாக் ஊழியருக்கு ரூ. 2000 கோட்டை

மதுவை ருசித்து எலிகள் சேட்டை - டாஸ்மாக் ஊழியருக்கு ரூ. 2000 கோட்டை
X
கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் புகுந்த எலிகள் அங்குள்ள ஒயின் பாட்டில்களின் மூடியை கடித்து குதறின.

நீலகிரி மாவட்டத்தில் மதுபானக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கூடலூர் அருகே காளம்புழா பகுதியில், டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இன்று காலை கடையை ஊழியர்கள் திறந்த போது, அங்கிருந்த மது பாட்டில்கள் சரிந்து கிடப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவற்றை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, கடையின் உள்ளே ராக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒயின் பாட்டில்களின் மூடியை எலிகள் கடித்து குதறிக் கொண்டிருப்பதை கண்டனர். அவ்வகையில், சுமார் 12 மதுபாட்டில்களின் மூடிகளை சேதப்படுத்தியும், பாட்டில்களை உடைத்தும் எலிகள் சேட்டை செய்துள்ளன.

எலிகளின் அட்டகாசத்தால் சேதமடைந்த பாட்டில்களின் மதிப்பு, சுமார் இரண்டாயிரம் ரூபாய் என்று கூறியுள்ள கடை ஊழியர்கள், இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்