வீடு வசதி, அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியினர் கலெக்டரிடம் மனு

வீடு வசதி, அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியினர் கலெக்டரிடம் மனு
X
நீலகிரி மாவட்டம் கூடலூர் பிதர்காடு பகுதியிலுள்ள குறும்பர் பழங்குடியினர் நீலகிரி கலெக்டரிடம் மனு

அரசின் பசுமை வீடு மற்றும் அடிப்படைத் தேவைகளை கேட்டு குறும்பர் பழங்குடியின மக்கள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பிதர்காடு பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட குறும்பர் இன பழங்குடியினர் இதுவரை தங்கள் பகுதியில் அரசின் பசுமை வீடு திட்டம் மூலம் தங்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை எனவும் 5 வீடுகள் மட்டுமே கட்டிக் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்பதாகவும் தங்களால் ஒரு லட்சம் ரூபாய் தொகை கொடுக்க முடியாத சூழ்நிலையில் வீடுகள் இல்லாமலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் பாதுகாப்பான முறையில் இருக்க வீடில்லை என தெரிவித்த பழங்குடியின குறும்பர் மக்கள் இனி வரும் மழை காலங்களில் தற்போதுள்ள வீடுகளில் மழைநீர் புகுவதால் கைகளை வைத்து இருக்க முடியவில்லை எனவே மாவட்ட நிர்வாகமானது தங்கள் கிராமங்களுக்கு மக்கள் பாதுகாப்புடன் இருக்க வீடுகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்