கூடலூரில் யானை தாக்கி பெண் பலி. வனத்துறை அமைச்சர் இரங்கல்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா அட்டி, வாளவயல், செத்த கொல்லி, சாமியார் காலனி , வாளமூலை, புஞ்சை மூலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக இரண்டு காட்டு யானைகள் சுற்றித்திரியும் திரிந்தன.,
இன்று இரவு வாளவயல் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக குடியிருப்பு பகுதியில் காட்டு யானை தாக்கி பூங்கொடி என்ற பெண் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கூடலூர் வனக் கோட்ட வன அதிகாரிக்கு( உத்தரவிட்டதுடன் ,கூடலூர் பந்தலூர் தாலுகாவில் கிராம பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கண்டறிய உரிய நடவடிக்கை எடுத்து வருவதால், பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
யானை - மனித விலங்கை மோதலை தடுக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் அரசு உரிய நடவடிக்கையை அவசரம் அவசியம் கருதி எடுக்கும் என தெரிவித்துக் கொள்வதாக தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu