நீலகிரி: வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்

நீலகிரி: வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்
X
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் வனத்துறை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு

புத்தாண்டு கொண்டாட்டங்களை பட்டாசுகள் வெடிக்காமல், பசுமை புத்தாண்டாக கொண்டாட நீலகிரி வனத்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் புத்தாண்டு தினம் வர உள்ளதால் 2022 ஆம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

இதையடுத்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முதுமலை, மாயார், சிங்காரா, பொக்காபுரம் உள்ளிட்ட வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து பசுமையான புத்தாண்டை கொண்டாட வேண்டுமென வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதினால் வனவிலங்குகள் அச்சத்தோடு கிராமங்களுக்குள் புகும் நிலை ஏற்படும் எனவே பொதுமக்கள் வன விலங்குகளையும் வனங்களையும் பாதுகாக்க இந்த புத்தாண்டை பசுமை புத்தாண்டாக கொண்டாட முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் வனத்துறை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story