அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு பலி
X

பலியான குரங்கு.

மசினகுடியிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் வாகனம் மோதி அனுமன் குரங்கு பலியானது தொடர்பாக வனத்துறை விசாரணை.

ஊட்டியிலிருந்து முதுமலை செல்லும் மசனகுடி சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பெரும்பாலும் மான், மயில், குரங்கு, ஆகிய வனவிலங்குகள் சாலை ஓரங்களில் உலா வருவதும் சாலையை கடப்பதும் இருந்து வருகிறது. இந்நிலையில் மசனகுடி சாலையில் அனுமன் குரங்கு இறந்து கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் வாகனம் மோதி குரங்கு இறந்திருப்பதை உறுதி செய்தனர். மேலும் அச்சாலை வழியாக சென்ற வாகனங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இறந்த அனுமன் குரங்கு முதுமலை யானைகள் முகாம் மருத்துவமனையில் பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்