/* */

கூடலூரில் வளர்ச்சிப்பணிகள்: வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

கூடலூர் உழவர் சந்தை மற்றும் மழையால் சேதமடைந்த பகுதிகளை, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் பேருந்து நிலையத்தில் 4.75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் மழை, வெள்ளத்தால் கோல்டன் அவென்யூ பகுதியில் சேதமடைந்த பாலத்தையும், கூடலூர் உழவர் சந்தையையும், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதேபோல் பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து பணிகளை வேகப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், கூடலூர் பேருந்து நிலையத்தில் 4.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தேன். டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடித்து விடும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின்போது கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், நகராட்சி ஆணையர் பாஸ்கரன், வட்டாட்சியர் தினேஷ் ,மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 2 July 2021 1:29 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  4. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  7. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  8. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  9. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  10. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி