கூடலூரில் இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை

கூடலூரில் இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை
X

சேரம்பாடி பகுதியில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானை.

சேரம்பாடி நகரபகுதியில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நுழையும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சேரம்பாடி பகுதியில் இரவில் ஒய்யாரமாக உலா வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். பின்னர் சிறுது நேரம் ஊருக்குள் அங்கும், இங்கும் சுற்றித் திரிந்த காட்டு யானை, வனப்பகுதிக்குள் சென்ற பின் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags

Next Story
ai marketing future