ஆட்கொல்லி புலியின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - விரையும் வனத்துறையினர்

ஆட்கொல்லி புலியின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - விரையும் வனத்துறையினர்
X

ஆட்கொல்லி புலி (கோப்பு படம்)

முதுமலை மசினகுடி வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியின் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மசனகுடி பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக, ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக வனப்பகுதியில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர் மூன்று புலிகளை கண்டுள்ளதாகவும் அதில் ஆட்கொல்லி புலி எதுவும் இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து, வனப்பகுதியில் 20 பேர் கொண்ட குழு புலியை தேடும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆடு மேய்த்தலில் ஈடுபட்டிருந்த மங்கள பகவன் என்ற வரை கொன்ற அதே இடத்தில், தற்போது புலியின் உறுமல் சத்தம் மற்றும் கால் தடத்தை கண்டுள்ளதாக, மாடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மக்கள் சிலர் தகவல் தெரிவித்தனர்.

இருப்பிடத்தை கண்டறிந்ததாக தகவலையடுத்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் தமிழக வன உயிரின காப்பக இயக்குநர் மற்றும் கேரளா வனத்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பகுதியில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story