2 கும்கி யானைகளுடன் ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரம்

2 கும்கி யானைகளுடன் ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரம்
X

ஆட்கொல்லி புலியை தேடும் பணிக்காக அழைத்து வரப்பட்டுள்ள கும்கி யானை.

கூடலூரில், ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் இரண்டு கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசனகுடி வனப்பகுதியில், ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் உள்ளது. கடந்த 10 நாளாக போக்குகாட்டி வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மசனகுடி வனப்பகுதியில் உலா வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்க, மூன்று மோப்ப நாய்களுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் இருந்து, சீனிவாசன், உதயன் என்ற இரு கும்கி யானைகள் வனப்பகுதியில் புலியைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழக வன உயிரின காப்பக இயக்குனர் சேகர் குமார் நீரஜ் மற்றும் 2 மருத்துவர்கள், மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். இதனிடையே முதுமலை சாலையில் வாகன ஓட்டிகள் புலியை கண்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து, தற்போது அந்தப் பகுதிக்கு இரண்டு கும்கி யானைகள் உடன் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது.

Tags

Next Story
ai based healthcare startups in india