நீலகிரிக்கு வேனில் குட்கா கடத்தல்: ஒருவர் கைது

நீலகிரிக்கு வேனில் குட்கா கடத்தல்: ஒருவர் கைது
X
கூடலூர் புதிய பஸ்டாண்டில் போலீசார் நடத்திய சோதனையில், குட்கா கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் இருந்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு, குட்கா கடத்தி வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார், கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வாகனச்சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கர்நாடகாவில் இருந்து அந்த வழியாக, பால் எடுத்து வந்த மினி வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில்,18 சிறிய பண்டல்களில், தலா 30 பாக்கெட் வீதம், 565குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கூடலூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பவரை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!