கூடலூர்: யானையை கண்காணிக்க ரோந்து சென்ற வனத்துறை குழுவினர்

கூடலூர்: யானையை கண்காணிக்க ரோந்து சென்ற வனத்துறை குழுவினர்
X

காட்டு யானையை விரட்டும் பணியில்  10 பேர் கொண்ட வனத்துறை குழு.

கூடலூர் அருகே கிராமப் பகுதியில் உலா வரும் காட்டு யானையை விரட்ட 10 பேர் கொண்டவனத்துறை குழு தீவிரம்.

கூடலூர் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளை கண்காணிக் காணிக்கும் பணியில், இரவு முழுவதும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக கூடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பந்தலூர், பாடந்துறை, குந்திதால், சீனக் கொல்லி, உள்ளிட்ட கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் இரவும் பகலும் காணப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் யானைகளை விரட்ட கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து 10 பேர் கொண்ட வனத்துறை குழு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!