தொடரும் காட்டு யானை அட்டகாசம்:பொது மக்கள் அச்சம்

தொடரும் காட்டு யானை அட்டகாசம்:பொது மக்கள் அச்சம்
X

சேதமடைந்த வீடு.

முதுமலை ஊராட்சி நம்பிக்குன்னு பகுதியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்.

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் விநாயகன் என்ற யானை குடியிருப்புகளையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இரவில் உலா வந்து குடியிருப்புகளை சேதப்படுத்தும் யானையால் பொதுமக்கள் உயிர்போகும் அச்சத்தோடு இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு முதுமலை ஊராட்சிக்குட்பட்ட நம்பிக்குன்னு பகுதியில் உள்ள வேணு சாந்தகுமாரி தம்பதியரின் வீடை சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். ஒவ்வொரு நாளும் விநாயகன் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர். எனவே விநாயகன் காட்டு யானையை பிடித்து முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது