தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா: மக்கள் கிலி

நீலகிரியில், தமிழக கேரளா எல்லை பகுதியில், 20- க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்து, கேரளா வயநாடு பகுதியை ஒட்டியுள்ள, தமிழக எல்லையில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

இந்நிலையில், பகல் நேரங்களிலேயே தமிழக எல்லையில் உள்ள தேயிலைத்தோட்டத்தில் மூன்று குட்டிகளுடன், 20க்கும் மேற்பட்ட யானை கூட்டம் நுழைந்தது. இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் குடியிருப்பு பொது மக்களும் அலறினர்.

இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு, யாரும் வெளியே செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்; அத்துடன், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ai marketing future