/* */

கூடலூர் அருகே அதிகாலையில் உலா வந்த காட்டு யானை - மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, பாடந்துறையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்தனர்

HIGHLIGHTS

கூடலூர் அருகே அதிகாலையில் உலா வந்த காட்டு யானை - மக்கள் பீதி
X

கூடலூர் பாடந்துறை கிராமத்தில் உலா வந்த ஒற்றை காட்டு யானை.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் உலாவரும் காட்டு யானைகளால் தொழிலாளர்களும் குடியிருப்புவாசிகளும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கூடலூர் அருகே பாடந்துறை என்னும் பகுதியில், இன்று அதிகாலையில் ஊருக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது; ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்த யானையைக் கண்ட பொதுமக்கள், அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் ஒலிபெருக்கி வாகனம் மூலம் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இரவு நேரங்களில் மட்டும் உலா வந்த காட்டு யானைகள், தற்போது பகல் நேரங்களிலும் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Updated On: 13 July 2021 2:52 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?