நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சி: நீர் நிரப்பும் பணியில் வனத்துறை

நீலகிரி வனப்பகுதிகளில் வறட்சி: நீர் நிரப்பும் பணியில் வனத்துறை
X

வன விலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க, வனப்பகுதிக்குள் குட்டைகள் அமைத்து, லாரி மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பும் வனத்துறையினர்.

வனப்பகுதிகளில் நிலவும் கடும் வெயிலால், வனவிலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, தொட்டிகளில் நீர்நிரப்பப்பட்டு வருகிறது.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடும் உறைபனி பொழிவு காணப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 55 சதவீத வனப்பகுதியில் முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டம் பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் உள்ள செடி கொடிகள் காய்ந்து, கருகின. செடி கொடிகள் அனைத்தும் எளிதில் தீப்பற்றும் அளவிற்கு கடும் வறட்சி நிலவுகிறது.

வனப்பகுதிகளை காட்டு தீயில் இருந்து பாதுகாக்கும் வகையில், முதுமலை புலிகள் காப்பகம், வெளி மண்டலம் மற்றும் உள் மண்டல பகுதிகளில், வனப்பகுதியில் அமைந்துள்ள உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை இருபுறமும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது பல கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு துரித வேகத்தில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்ட வருவதால் காட்டுத்தீ ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த ஈட்டி, தேக்கு ,சந்தனம் போன்ற விலை உயர்ந்த மரங்களை பாதுகாக்கப்படும்.

இதுதவிர, யானை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள், அரியவகை பறவைகள் பாதுகாக்க முடியும். அத்துடன் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகளுக்கு வனப்பகுதிக்குள் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தித்தர தமிழக அரசு நிதி ஒதுக்கி, அடர்ந்த வனப் பகுதிகளில் வனத்துறையினர் புதிதாக தொட்டிகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பி வருகின்றனர். இதன்மூலம் புலி, மான், கரடி போன்ற விலங்குகள் தண்ணீர் அருந்தி தங்களது தாகத்தை தீர்த்துக் கொள்கின்றன.

Tags

Next Story