கூடலூரில் காட்டு யானை தாக்கி பெண் பலி: மக்கள் அச்சம்

கூடலூரில் காட்டு யானை தாக்கி பெண் பலி: மக்கள் அச்சம்
X

காட்டு யானை தாக்கி பலியான பெண்

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி தொடர்ந்து இதுவரை யானையால் தாக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த கரிய சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் அரசு தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருபவர் நேற்று இரவு பூங்கொடி 50 அவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பிய போது அங்கிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியது சம்பவ இடத்திலேயே அவர் பலியான.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த யானையை இப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!