கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று

கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று
X
கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செயடயப்பட்டது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு வங்கி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அக்ரஹார தெருவில் உள்ள வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து வங்கிக்குள் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றினர்.

பின்னர் வங்கி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக நகராட்சி அதிகாரிகள் அறிவித்து அறிவிப்பு பலகை வைத்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அதிகாரிகள் முதல் சாதாரண மக்கள்வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே இவற்றின் பாதிப்பை உணர்ந்து பொதுமக்கள் ஒத்துழைத்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story
ai marketing future