வனப்பகுதியில் பழங்குடியினருக்கு கொரோனா விழிப்புணர்வு

கூடலூரில், வனப்பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சலை பகுதியில், வனப்பகுதியை ஒட்டி அதிக அளவிலான பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வு குறைவாக உள்ள இப்பகுதி மக்களுக்கு, தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

அவ்வகையில், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியினர் கிராமமான வாச்சிகொல்லி பகுதிக்கு , தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் நட்ராஜ் தலைமையில் சென்ற அதிகாரிகள், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அனைத்து மக்களுக்கும் சோப்பு மற்றும் முகக் கவசங்களை வழங்கினர். கொரோனா பரவும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

பின்னர், அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கிருந்த பழங்குடியினர்கள் மத்தியில் தொற்று பரவாமல் இருக்க அவர்களின் மொழியிலேயே, எவ்வாறு கைகழுவ வேண்டும், முகக்கவசத்தின் முக்கியத்துவம் என்ன மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story
business of ai