இன்றாவது சிக்குமா ஆட்கொல்லி புலி?
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்டேஷ்.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்டேஷ் கூறியதாவது:
T23 புலியை பிடிக்க ஒரு வாரமாக முயற்சித்து வருகிறோம். கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டம் அதிகமாக இருப்பதால் பிடிக்க முடியவில்லை. ஆனால் தற்போது மசினகுடி வன பகுதிக்கு வந்துள்ளது. தமிழக தலைமை உயிரின பாதுகாவலர் உத்தரவு படி அனைத்து யூக்திகளும் பயன்படுத்தி புலி பிடிக்கபடும். புலி திறந்த வெளிக்கு வந்தவுடன் முதலில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிக்கப்படும்.
இந்த புலி காட்டிற்குள் செல்லாமல் கால்நடைகளை தாக்குகிறது. தற்போது கொல்லபட்டுள்ள 4 பேரும் கால்நடைகளை மேய்த்த போது தான் கொன்றுள்ளது. இனி முதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடைகளை மேய்க்ககூடாது. இன்று காலை புலி இருக்கும் இடம் கண்டறியபட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. டுரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உயிரிருடனோ அல்லது சுட்டோ பிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்டேஷ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu