கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா

கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா
X

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா.

கடந்த நான்காம் தேதி துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.

உதகை அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த கோவில் திருவிழா நடைபெறவில்லை.

இந்த முறை கடந்த நான்காம் தேதி துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி வெகுவிமர்சியாக நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் வடம்பிடிக்கப்பட்ட திருத்தேர் ஆனது கோவிலை சுற்றி வலம் வந்தது. இந்த தேர் பவனியில் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி கலந்து கொண்டனர்.

இதில் சிம்ம வாகனத்தில் பொக்காபுரம் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் பவனியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கல் உப்பு இரைத்து அம்மனை வழிபட்டனர்.

Tags

Next Story