முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழந்தது

முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழந்தது
X

காயத்துடன் பிடிபட்டு, முதுமலை அபயாரண்யத்தில் அமைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  35 வயது காட்டு யானை, சிகிச்சை பலனின்றி இறந்துது.

கூடலூரில், வால் பகுதியில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை, முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தோட்டமூலா என்னும் பகுதியில், பிற யானைகளுடன் நடந்த மோதலில், ஆண் காட்டு யானைக்கு வால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் 2 வருடமாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து, முதுமலையில் உள்ள அபயாரண்யம் யானைகள் முகாமிற்கு கொண்டு வந்தனர்.

கடந்த ஜூன் 17 ம் தேதி, முதுமலை அபயாரண்யத்தில் அமைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்கள், யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த யானை திடீரென உயிரிழந்தது பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future