கோழி விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைகளில் உள்ள கோழி விற்பனை கடைகளில் கால்நடைதுறையினர் ஆய்வு நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கூடலுார் பந்தலூர் எல்லை பகுதிகளான நாடுகானி, சேரம்பாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல், கக்கநல்லா உள்ளிட்ட சோதனைசாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடைகளில் இன்று ஆய்வு மேற்கொண்ட மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் மற்றும் கால்நடைதுறை குழுவினர் கேரளாவில் இருந்து இறைச்சிக்காக கோழி உள்ளிட்ட பறவையினங்கள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கோழிகளையும் ஆய்வு செய்தனர். கூடலூர் பகுதியில் உள்ள தனியார் கோழி பண்ணையிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் .மறு உத்தரவு வரும் வரை இந்த ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என கால்நடைதுறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu