பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு : நீலகிரி வியாபாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகர்கள், வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட் டது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருணா கூட்டத்தில் பேசியதாவது:- தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கால் ஆன பைகள், கப்புகள், டம்ளர்கள், கரண்டிகள், முலாம் பூசிய காகித தட்டுகள், சாப்பாட்டு இலைகள், தோரணம் மற்றும் கொடிகள் உள்ளிட்ட 19 வகையான பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே நீங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாம கேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், வருவாய் கோட்டாட்சி யர்கள் மகராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதரதுல்லா (கூடலூர்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, ஊட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் உள்பட அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu