பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பா.ஜ.க வேட்பாளர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சனக்கல், கெரடா, கம்மந்து, பாலடா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஊட்டி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜன் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.பின்பு அவர் கூறும்போது ஊட்டி தொகுதியில் தன்னை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகரின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், உதகையை உலக தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும், தேயிலைக்கு குறைந்தபட்ச விலையான 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும், சுற்றுலா தலமான ஊட்டியில் மல்டி பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என அமைச்சரிடம் கூறியுள்ளதாகவும் தான் வெற்றிபெற்றால் இக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன் என கூறினார்.

Tags

Next Story
ai healthcare technology