புல்வெளி மைதானத்திற்குள் அனுமதி இல்லை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

புல்வெளி மைதானத்திற்குள் அனுமதி இல்லை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
X
கோடை சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

ஊட்டி பூங்காவில் உள்ள புல்வெளி மைதானங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மைதானங்களுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல பூங்கா நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசனுக்காக உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் பராமரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


குறிப்பாக உலகப் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ஆசியாவிலேயே பெரிய புல்வெளி மைதானமாக கருதப்படும் இந்த புல்வெளி மைதானங்களை

இருந்து பாதுகாக்கும் வகையில் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புல்வெளி மைதானங்கள் பராமரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் மைதானத்திற்க்குள் செல்ல பூங்கா நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் பூங்காவில் உள்ள பல்வேறு பழங்கள் வடிவிலான இருக்கைகளுக்கு வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
Will AI Replace Web Developers