நீலகிரியில் பழங்குடியினருக்கு 100% தடுப்பூசி: சாதித்தது எப்படி?
தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது நீலகிரி மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டது. எனவே, கோவிட்டின் மூன்றாவது அலைக்கு முன்னதாக தடுப்பூசிகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 7.2 லட்சம், அதில் 21,000 பழங்குடியினர் இந்தியாவின் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். 21,000 க்கும் மேற்பட்ட சமூகத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் இரட்டை தடுப்பூசி நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அவர்களில் பலர் தொலைதூர வனப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
இந்த சமூகங்களைச் சேர்ந்த பலர் தடுப்பூசி மையங்களுக்கு செல்வதேயில்லை. எனவே அவர்களை அணுகுவது முக்கியம் என்பதால், கடந்த சில மாதங்களாக, 100% தடுப்பூசி இலக்கை அடைய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கிட்டத்தட்ட 1,300 பழங்குடி குடியிருப்புகளுக்கு சென்றனர்.
- ஒரு பழங்குடி குடியிருப்பை அடைய காட்டுக்குள், ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். நான்கு பழங்குடியினருக்கு தடுப்பூசி போட கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும். ஒருவர் வெளியேறினாலும், இங்கு சுமார் 500 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம்.
- சுகாதார குழுக்கள் பட்ட அவஸ்தைகள் ஏராளம். ஈரமான காட்டுப்பகுதிக்குள் செல்லும்போது, அட்டைப்பூச்சி ரத்தத்தை உறிஞ்சும்.ஆனாலும், தொற்றுநோய்க்கு மத்தியில் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டனர்.
- மற்றொரு பெரிய சவால் பழங்குடியினரிடையே தடுப்பூசி போடுவது குறித்த தயக்கம். அதற்காக மாவட்ட நிர்வாகம் ஒரு சில பழங்குடியினருக்கு தடுப்பூசி போட்டு, அவர்கள் தூதர்களாக மாறி, அவர்கள் சமூகத்தில் உள்ள அனைவரையும் தடுப்பூசி போடச் செய்தனர்.
- பழங்குடி மொழிகளில் ஒரு தடுப்பூசி ஜிங்கிள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவ்வாறு பல வழிகளில், பல்வேறு இடர்ப்பாடுகளை சமாளித்து 100% தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளது மாவட்ட நிர்வாகம். இந்த இலக்கை எட்ட உழைத்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இஇலக்கை எட்ட உதவிய அனைவருக்கும் நமது பாராட்டுகள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu