ஊட்டி தொகுதி பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

ஊட்டி தொகுதி பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
X

நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்ததையடுத்து, அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஊட்டி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜன், தனது வேட்பு மனுவை உதகை சப்கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அப்போது கூட்டணி கட்சியான அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் மற்றும் பாஜக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊட்டி சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றால் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்காக பணியாற்ற போவதாகவும், மத்திய மாநில அரசுகளின் துணையோடு அனைத்து நலத்திட்ட பணிகளும் செயல்படுத்தப்படும் என்றும் தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.முன்னதாக ஊட்டி காபிஹவுஸ் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வாக்குகளை சேகரித்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story
ai future project