யானையிடமிருந்து உயிர் தப்பிய பெண்

யானையிடமிருந்து உயிர் தப்பிய பெண்
X
உதகை மசினகுடி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்மணியை தாக்க முயன்ற காட்டு யானை, நூலிழையில் உயிர் தப்பிய பெண்.

நீலகிரி மாவட்டம் முதுமலை, மசினகுடி ஆகிய பகுதி அடர்ந்த வனப்பகுதி ஆகும். இப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் அதிகமாக உள்ளது.

இதில் மசினகுடி பகுதி யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது. மேலும் யானை வழித்தடத்தில் முக்கிய இடமாகவும் மசினகுடி இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும் நிலையில் மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஆனைகட்டி ஆனைக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.


இந்நிலையில் மசினகுடி - கல்லட்டி சாலை சீகூர் ஆற்றுப்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவரை அங்கிருந்த காட்டு யானை துரத்தும் பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில் காரின் பின்னால் வரும் இருசக்கர வாகனத்தை யானை துரத்தி செல்வதும் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்மணி தனது வாகனத்தை கீழே போட்டுவிட்டு மயிரிழையில் யானையிடம் இருந்து தப்பிப்பதை அங்கிருந்தவர்கள் செல்போன் மூலம் பதிவு செய்துள்ளனர்.

அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த பகுதியில் மிக கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். சாலை ஓரத்தில் நிறுத்தி வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது அவ்வாறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சீகூர் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!