கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு
X

சென்னை தனியார் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு என முறையான விதிமுறைகள் இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது..

நேரடி வகுப்புகளைப் போன்று, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற வாய்ப்புள்ளது. 7 பேர் கொண்ட குழு வரும் 11ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#வகுப்பு #விதிமுறை #ஆன்லைன் #கல்லூரி #team #people #newrules #new #rules #onlineclass #online #class #students #teachers #colleges #college #staff #tamilnadu #Instanews

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!