புதிய பாதையில் மு.க.ஸ்டாலின் : மக்கள் முன்..

புதிய பாதையில் மு.க.ஸ்டாலின் :  மக்கள் முன்..
X

மு.க. ஸ்டாலின் 

தமிழகத்தில் கருணாநிதி இல்லாமல் ஒரு புதிய வெற்றியை மு.க.ஸ்டாலின் பெற்று தனி அடையாளத்தை பதிவு செய்துள்ளார்.

புதிய பாதையில் மு.க.ஸ்டாலின். தந்தை கருணாநிதியின் அரசியல் பயணத்தில் களமாடியவர். கருணாநிதியின் எழுத்தாற்றல், அவரது அரசியல் ராஜ தந்திரங்கள் தனி ராஜ்ஜியம் படைத்தவை. தந்தையின் குருகுலத்தில் அரசியல் பயிற்சி பெற்ற அனுபவம்,அவருக்கு சாதுர்யமான ஆட்சியை வழங்க உதவிடும் என்ற நம்பிக்கையை அவருக்கு கிடைத்துள்ள வாக்குகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கருணாநிதியின் மகன் என்ற தனி அடையாளம் இல்லாமல் அவர் தனி ஆவர்த்தனம் செய்துள்ளதையும் மறந்துவிட முடியாது. கருணாநிதிக்குப்பின் அவரது குடும்பத்திலும், கட்சியிலும் ஏற்பட்ட விரிசல்களை தனி ஒரு ஆளாக நின்று சரிப்படுத்தினார். பிரிவினைகளின்போதும் அவர் எவ்வித சலனங்களையும் காட்டிக்கொண்டதில்லை.

அவரைப்பற்றி எதிர்கட்சியினரும், கட்சிக்குள்ளேயும் விமர்சனங்கள் எழுந்தபோதும் பெரிய எதிர்வினைகளை அவர் காட்டியதில்லை. ஒருவேளை அதுவும் அவரது ஆளுமையின் அடையாளமாக கூட இருக்கலாம். தற்போது அவரது தலைமையில் ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளார். கருணாநிதி இல்லாமல் பெறும் முதல் வெற்றி. நாடு முழுவதும் இருந்து பல தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். இதுவே, அவரது அரசியல் பயணத்தின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

இனி, அவர் மக்களுக்கு செய்யும் திட்டங்களே,அவரை மக்களின் தலைவனாக தனி அடையாளப்படுத்த வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!