பள்ளிக்கல்வித்துறையில் புதிய பதவி உயர்வு நடைமுறை..!
தமிழக பள்ளிக்கல்வித்துறை (கோப்பு படம்)
பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் State Seniority என்ற நடைமுறை பின்பற்றி பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
தொடக்கக் கல்வி நிர்வாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இது நாள் வரை ஒன்றியளவில் கடைபிடிக்கப்பட்டது.
இதனால் பதவி உயர்வு அந்த ஒன்றியளவில் மட்டுமே வழங்ககூடிய நிலையில் இருந்தது. இதனால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை (State Seniority) உள்ளது போலவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி மாநில அளவிலான பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu