பிப்.27-ல் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

பிப்.27-ல் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
X
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை(27-ம் தேதி) நடக்கிறது.

நாமக்கல் : நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை(27ம் தேதி) நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஓட்டல் ராதா பிரசாத்தில் நாளை(27-ம் தேதி) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. அவைத் தலைவர் நடனசபாபதி தலைமை வகித்து பேசுகிறார்.

இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வங்கியில் மீட்கப்பட்ட அடமான நகை போலி : தனியாா் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்